தமிழ் திரை இசைல இளையராஜாவின் பங்குன்னு புத்தகம் எழுத யாராவது முயற்சிப்பாங்கன்னா, குறைஞ்சது ஆயிரம் பக்கங்கள் கொண்ட பத்து பகுதியா, அந்த புத்தகத்த வெளியிட வேண்டி இருக்கும்.

ராசையா, இசை அமைப்பாளர் தன்ராஜ் மாஸ்டரால ராஜா என்று செல்லமா கூப்பிடப்பட்டு, பின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்னால இளையராஜான்னு அழைக்கப்படுறாரு. இந்தப்பெயராலேயே அன்னக்கிளி படத்துல அறிமுகமும் ஆகுறாரு. அதுக்கப்பறம் நடந்ததெல்லாம் வரலாறு.
பிரசாத் ஸ்டூடியோ அப்படிங்கறது, சென்னை சாலிகிராமத்துல இருக்கு. இங்க இளையராஜாவுக்குன்னு ஒரு அறை, 1977 ல, அதன் நிறுவனர் எல் வி பிரசாத் குடுக்கறாரு. சுமார் 40 வருஷத்துக்கும் மேல, இங்கிருந்துதான் தன்னுடைய பாடல்கள இசை அமைக்கிறாரு இளையராஜா. இந்த அறையோட கதவு எப்போ தொறக்கும், நம்ம எப்போ இசைஞானிய பாக்குறதுன்னு காத்து கெடந்த இயக்குனர்கள் நூத்துக்கும் மேல.

தன் இசை போலவே, கதைக்குள்ள உயிரோட்டம் எதிர்பாக்குற இசைஞானிய எளிதுல ஒரு படத்துக்கு இசை அமைச்சுட வச்சுட முடியாது. முதல் முறை இயக்குனர்னாலும் பாரபட்சம் எல்லாம் கெடையாது. கதை நல்லா இருந்தா மட்டுமே இசை.
நாசர் தன்னுடைய முதல் பட அனுபவங்கள பகிரும் காணொளி கீழ கொடுக்கப்பட்டிருக்கு. “தென்றல் வந்து தீண்டும் போது” அப்படிங்கற பாடல தன் அவதாரம் படத்துல எப்படி அமைஞ்சுதுனு நகைச்சுவையா சொல்றாரு.
நாசர் பேச்சு: https://youtu.be/563qJOreBqI
பாடலுக்கான லிங்க்: https://youtu.be/Ue5GbzWXZpY
தனக்குனு பிரசாத் ஸ்டூடியோவின் நிறுவனரால கொடுக்கப்பட்ட அறைய, அவர் பேரன் சாய் பிரசாத் கேக்க, அங்கேதான் எல்லாம் ஆரம்பிக்குது. நீதிமன்றம் போற வழக்குக்கு என்ன தீர்ப்பு வரும்னு எல்லாரும், குறிப்பா இசைஞானி ரசிகர்களும், திரை உலகமும் எதிர்பார்த்து காத்துகிட்டிருக்கு.

40 வருசமா ஒரு மனுஷன் தன்னோட உயிர் மூச்சா நேசிக்கிற ஒரு இடத்த, அது இடம்னு சொல்லக்கூட வரல. எவ்வளவு நினைவுகள் இருக்கும்!!. இயக்குனர்கள் பாரதிராஜா, பாலசந்தர், பாக்கியராஜ், ஆர் பார்த்திபன், ஆர் கே செல்வமணி, மணிரத்னம், ஆர் வி உதயகுமார், பி வாசு, விசு, ஆர் சுந்தர் ராஜன் – இவங்க பேர் சொன்னவுடனே இவங்களோட படமும், அந்த படத்தில் வந்த ஒரு பாடலாவது கண் முன்னாடி வந்து போகுதா இல்லையா…..அதுதான் மேஸ்ட்ரோ…

2017 ல பாடகர்கள் எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா, எஸ் பி சரண் ஆகியோருக்கு, ஒரு சட்ட அறிவிப்ப அனுப்புறாரு இளையராஜா. தன்னோட பாடல்கள முறையான முன் அனுமதி இல்லாம மேடைக்கச்சேரிகள்ல பாடக்கூடாது. இது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானதுனு, குரல் கொடுக்குறாரு. தான் இசை அமைச்சதுக்கான உரிமைத்தொகைய கொடுக்காம, ஆனா மேடையில அதனால வர ஊதியத்த மட்டும் அனுபவிக்க முடியாதுங்கறதுதான் இந்தச்செய்தியின் உள்ளடக்கம்.

எஸ் பி பி ரசிகர்கள் மனம் வருந்துறாங்க. இசைஞானிய வேறு விதமாவும் பேசுறாங்க. இதக்கூர்ந்து கவனிச்சோம்னா ஒரு விசயம் விளங்கும். தப்பு செய்யுறது தனது நண்பன்னாலும், கேட்பது என்னோட உரிமைனு ஆணித்தரமா சொல்லாம சொல்லிட்டாரு இசைஞானி. எத்தனையோ ஆடியோ கம்பெனிகள் மேலயும் 2015ல வழக்கு தொடுத்திருக்காருங்கறதையும் செய்தியா படிச்சிருக்கோம். ஆங்கிலத்தில் இந்த செய்தி ஆங்கிலத்தில் கீழ கொடுக்கப்படிருக்கு. எதற்காக இந்த செய்தின்னா, இளையராஜா அவர்களுக்கு சட்டம் என்ன என்பது தெரியும், என்பதற்காக. ஒரு வேளை எல் வி பிரசாத் அவர்கள் அறை எண் 1 ஐ அன்பளிப்பு பத்திரமாக்கி (Gift Deed) பதிவு செய்து கொடுத்து இருந்தா, சட்டப்படி அந்த அறை இளையராஜா அவர்களுக்கு சொந்தமா இருந்திருக்கும். அது அன்றளவில் அன்பளிப்புன்னா, இன்றளவும் அதுவே. ஆனால் சட்டம் எல்லாத்துக்கும் ஆவணம் கேக்கும். அங்கதான் சிக்கல் எழுந்திருக்கும் னு யூகிக்க முடியுது.
What the spat between Ilaiyaraaja and SPB is really about? – The Hindu – https://www.thehindu.com/entertainment/movies/what-the-spat-between-ilaiyaraaja-and-spb-is-really-about/article17665382.ece
தர்மசங்கடம் என்பதாகதான் பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தை முதல்ல பாக்க வேண்டியிருந்தது…ஆனா வழக்காக மாறவும், இது இசைஞானி மற்றும் அவரது ரசிகர்கள கோபமடைய செய்தது. அறை எண் 1 இன் சாவியை நிறுவனர் பிரசாத் அவர்கள் இசை ஞானிக்கு குடுத்த போது இதெல்லாம் வழக்காக வரும்னு அவர் கனவுல கூட எண்ணியிருக்க மாட்டாரு.

அவர் பேரன், அந்த அறையில் இருந்த உணர்வுகளுக்காவது மதிப்பளித்து இதை வேறு விதமா அனுகியிருக்கலாமோனு தோணுது. வழக்கின் தீர்ப்புல, நீதிமன்றம் சில மணி நேரங்கள்ல தன்னுடைய உடைமகள, கருவிகள, விருதுகள எடுத்துட்டு, இசைஞானி கேட்டுக்கொண்டதின் பேரில் கடைசியாக தன் இசை வாழ்ந்த, வாழ்கின்ற எடத்துல தியானம் செய்யவும் அனுமதிச்சுது. மேல சொன்ன இயக்குனர்கள் பலரும், ஸ்டூடியோ நிர்வாகத்துடன் நடந்த பேச்சு வார்த்தையும் இதுக்கு காரணம்.
தன் ஸ்டூடியோ திறப்பதற்கு முன் இசை ஞானி, “சத்யா ஸ்டூடியோ போலவே, ஜெமினி ஸ்டூடியோ போலவே, விஜயா வாஹினி ஸ்டூடியோ போலவே, ஏ வி எம் ஸ்டூடியோ போலவே, பிரசாத் ஸ்டூடியோவும் காணாமல் போகும்”னு ஒரு சாபமும் விட்டுட்டாரு!
இளையராஜாவின் பேட்டியை பார்க்கவும். https://youtu.be/M0y6RgO4AUs
இன்னிக்கு கோடம்பாக்கத்தில் தனக்குனு ஒரு ஸ்டூடியோவை இசைஞானி கட்டிட்டாரு. சரியா இந்தப்பதிவு வெளியாகிற இதே தேதியில், நேரத்தில்தான் தன் முதல், இரண்டாம் பாடலையெல்லாம் இசை அமைச்சுக்கிட்டு இருப்பாரு. ஆமாம், இசை அமைச்சுகிட்டே இருப்பாரு….
இசைஞானி இசை நிகழ்ச்சிகளின் வர்ணனை தொகுப்பு: