ஓட்டு போடணுமா?

6 கோடி 29 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள். ஆளுமை பத்திதான் இந்தத்தேர்தல்ல பேச்சு. தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகள் இப்போ இல்ல. இதுவரை இருந்த ஆளுமையைப்பாத்து மட்டுமே ஓட்டுப்போட்ட வாக்காளர்களின் மன நிலை, இன்று எப்படி இருக்கிறது என்பதைத்தேர்தல் முடிவு செய்யும். தமிழ்நாடு முழுவதும் சுமார் 91000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத்தேர்தலுக்கு முன் லாக்டவுன் நம் கண் முன்னே வருது. லாக்டவுன் போது பலர் தற்காலிகமாக வேலை இழந்தாங்க, பலரின் தொழில், வருமானம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.Continue reading “ஓட்டு போடணுமா?”

இளையராஜாவின் சாபம்

தமிழ் திரை இசைல இளையராஜாவின் பங்குன்னு புத்தகம் எழுத யாராவது முயற்சிப்பாங்கன்னா, குறைஞ்சது ஆயிரம் பக்கங்கள் கொண்ட பத்து பகுதியா, அந்த புத்தகத்த வெளியிட வேண்டி இருக்கும். ராசையா,  இசை அமைப்பாளர் தன்ராஜ் மாஸ்டரால ராஜா என்று செல்லமா கூப்பிடப்பட்டு, பின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்னால இளையராஜான்னு அழைக்கப்படுறாரு. இந்தப்பெயராலேயே அன்னக்கிளி படத்துல அறிமுகமும் ஆகுறாரு. அதுக்கப்பறம் நடந்ததெல்லாம் வரலாறு. பிரசாத் ஸ்டூடியோ அப்படிங்கறது, சென்னை சாலிகிராமத்துல இருக்கு. இங்க இளையராஜாவுக்குன்னு ஒரு அறை, 1977 ல,Continue reading “இளையராஜாவின் சாபம்”

யானைய கொன்னுட்டாங்களே……

செய்தி: இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://youtu.be/nIJeXLXPsHA “பத்து மாசம் சுமந்து பெத்த புள்ளய பறிகொடுத்துட்டு நிக்கறன்யா” ன்னு நம்ம எங்கயாவது ஒரு துக்க நிகழ்வுல கேட்டிருப்போம்…. அப்படி, இப்ப இறந்து போன யானையோட அம்மா அழுகணும்னா, “இருபத்து ரெண்டு மாசம் பெத்த புள்ளய பறிகொடுத்துட்டு நிக்கிறன்பா”ன்னு தான் அழும். ஆமாம், ஒரு யானைய பெத்து எடுக்க தாய் யானைக்கு 22 மாசம் ஆகும். “யானைத்தீனி திங்கறான்பா”ன்னு நம்ம யாரையாவது சொல்ல கேட்டிருப்போம். ஒரு யானை ஒருContinue reading “யானைய கொன்னுட்டாங்களே……”

புல்லரிக்க வைக்கும் பூமி படம்

கதைக்களத்த முழுக்க முழுக்க விவசாயத்த பின்னணியா வச்சு எடுத்ததுக்கே இந்தக்குழுவுக்கு நம்ம வாழ்த்துகள சொல்லலாம்யா. பொங்கல் திருநாள் அன்னிக்கு விவசாயத்த போற்றுவோம் னு , பாடமா எடுக்காம, படமா எடுத்துருக்காம்லா, லட்சுமணன். லட்சுமணன் யாரும் தெரியுமுல்லா, படத்தோட இயக்குனரு. நாசா(அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்லா) விஞ்ஞானியா வர்ற ஜெயம் ரவிக்கு திடீர்னு விவசாயத்து மேல பற்று வருது. அதுக்குக்காரணம் தம்பி ராமையா. காஞ்ச பயிருக்கு நட்ட ஈடு கேட்டு போராடுற தம்பி ராமையா வ, காவல்துறை லத்தியாலContinue reading “புல்லரிக்க வைக்கும் பூமி படம்”

சினிமா பாக்கலைன்னா செத்துருவியா?

என் அம்மா இந்த கேள்விய என்கிட்ட நிறைய தடவ கேட்டிருக்காங்க. அப்போ எனக்கு 15 வயசுக்கு மேல, 22 வயசுக்கு கீழ. அம்மா, அம்மா புது படம் மா, ரஜினி படம்மா….கமல் படம்மா….. அம்மா ரகுமான் ம்யூசிக் மா, அம்மா அம்மா ஷங்கர் படம்மா னு நிறைய தடவ கேட்டிருக்கேன். அப்போல்லாம் ஒரு கேள்வி கேப்பாங்க. இப்ப இந்த சினிமா பாக்கலைன்னா என்ன செத்துருவியா? படிப்பு சரியா வராத பல பேரையும் சினிமா பைத்தியம் னு செல்லமாContinue reading “சினிமா பாக்கலைன்னா செத்துருவியா?”

ரஜினி செய்தது துரோகமா?

சிஸ்டம் சரி இல்லனு ஆரம்பிச்சாரு. சரி இவர்தான் நாம் எதிர் பார்க்கிற அரசியல்வாதினு எல்லாரும் நம்புனோம். இடையிடயே மக்களின் எழுச்சி, கொட்டாங்குச்சி என்று எதையெதையோ பேசினார். அட எவ்வளவு சிந்தநாவாதினு நாம நம்பினோம். 2017 லிருந்து ரசிகர்கள் இவர மல போல நம்பியிருந்தாங்க, அண்ணாமலை ஆச்சே! படம் ஆரபிச்சவுடனே இன்ட்ரோ சாங் தான் எல்லாரும் எதிர்பார்ப்பாங்க. அதப்போலவே மன்ற ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் னு அறிவிச்சு, மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம் னு அவர் எத சொன்னார்னு இப்ப வரைக்கும்Continue reading “ரஜினி செய்தது துரோகமா?”

எப்படி இருந்துச்சு லாக்டவுன் – பகுதி 2

மார்ச் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது எங்கள் யாருக்குமே தெரியாது நாங்கள் பல மாதம் ஒருவருக்கு ஒருவரை நேரில் சந்திக்க முடியாது என்பது…. மார்ச் 16 ஆம் தேதி திங்கட்கிழமை காலை எங்க நிறுவனம் அனுப்பின மின்னஞ்சலை அப்பதான் படிக்கிறேன்…ஒரே குதூகலம்…நான் ஏற்கனவே சொன்னது போல் சுடு சோறு என்பது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்…சூடு என்றவுடன் என் மனைவி காப்பி கொடுக்கும் போது, கொஞ்சம் சூடு பண்ணி கொடேன் னு நான்Continue reading “எப்படி இருந்துச்சு லாக்டவுன் – பகுதி 2”

எப்படி இருந்துச்சு லாக் டவுன்?

அத ஏன் கேக்கறீங்க னு நீங்க கேக்குறது புரியுது….ஆனா என் அனுபவத்த இங்கப்பகிரும் போது உங்களுக்கு நினைவுகள் மலரும். புன்னகை பூக்கும். அந்தப்புன்னகையை வர வைக்கிறதே என் நோக்கமாக இருக்கும். இப்பவும், எப்பவும்…. பொதுவாகவே நம்முடைய கற்பனை வளம் என்னைப்பல நேரம் ஆச்சரியப்படுத்தும். நோய் பரவுதுன்னவுடனே, சாவுதான் எல்லோரும் பயந்த விஷயம். அய்யய்யோ நான் செத்துடுவேன், என் கொழந்த குட்டிக்காகவாவது நான் உயிரோட இருக்கணும், அடப்பாவிகளா நான் 90ஸ் கிட்ஸ் டா..இன்னும் கல்யாணம் கூட ஆகல…நான் உயிரோடContinue reading “எப்படி இருந்துச்சு லாக் டவுன்?”